வி. புலிகள் வழக்கறிஞராக செயல்பட்ட தடா சந்திரசேகரன் காலமானார்.

0 330

தமிழ்தேசிய ஆதரவாளரும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வழக்கறிஞராக செயல்பட்டவருமான தமிழகத்தைச் சேர்ந்த அவர்கள் 14.08.2023 அன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரும், தமிழ்தேசிய சிந்தனையாளரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவருமான தடா சந்திரசேகரன் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 14.08.2023 மாலை அவர் காலமானார்.

விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளரான தடா சந்திரசேகர் இலங்கைக்கே சென்று ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டவர். தமிழ்நாட்டில் ஈழப்போர் குறித்தும், தமிழ் தேசிய விடுதலை குறித்தும் பேசி வந்தவர். தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனே அவர்கள் இவரை ஈழத்துக்கு அழைத்து நேரில் சந்தித்து பாராட்டி அவரின் தமிழ் உணர்வுக்காகவும் ஈழத் தமிழர்களின் விடுதலை போராட்டத்தின் ஆதரவு நிலைக்கவும் மதிப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஈழத்தமிழர்களுக்காக வழக்காடியதோடு தடா சட்டத்திற்கு எதிராக பல வழக்குகளை கையில் எடுத்து வழக்காடியதால் தடா எனும் இணைப்பெயர் பெயர் கொண்டு எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாய் தந்தையை தமிழகத்தில் தனது பாதுக்காப்பில் வைத்துப் பராமரித்து வந்தார் இதன் காரணமாக தமிழீழ விடுதலை புலிகள் போராளிகள் மத்தியில் பெரும் அன்பிட்கும் மதிப்பிட்கும் உரியவர் அன்னார்.ஒரு வழக்கறிஞர் மட்டும் அல்லாமல் சிறந்த தீர்க்கதரிசனப் பார்வை கொண்டவர்.உயர்ந்த தோற்றம் நிமிர்ந்த நடை கொண்ட இவரை சட்டப் புலமையால் பயன்பெற்றோர் ஏராளம் . அவரின் இழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது..

Leave A Reply

Your email address will not be published.