நிதர்சனம் நிறுவனத்தின் அதிகார பூர்வ இணையத்தளம் மீண்டும் உங்களுடன்..
பல நெருக்கடிகள், பொருளாதார சிக்கல்கள், இனத்துரோகிகளின் சதிவலைகள் என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து மீண்டும் நிதர்சனம் நிறுவனத்தின் அதிகார பூர்வ இணையத்தளம் மீண்டும் புதுப்பொலிவுடன் உங்கள் முன் நிதர்சனமாகின்றது.
அன்பான எம் மக்களே சதிவலைகளால் முடக்கப்பட்ட எமது நிதர்சனம் நிறுவனத்தின் இணையத்தளத்தை மீண்டும் பெரும் நெருக்கடிகள் மத்தியில் ஆரம்பிக்கின்றோம். நாம் எமக்கான அதிகார பூர்வ ஊடகமாக இயங்கவும், எமது தமிழர் ஆவணங்களை பாதுகாக்கும் ஒரு தளமாகவும் தொடர்ந்தும் முன்னேறிவர உங்களின் பேராதரவையும் பங்களிப்பையும் எதிர்பார்த்து நிற்கிறோம். நாம் எமது தமிழ் தேசியம் மீது காதல் கொண்டு தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தொடர்ந்தும் ஈழ விடியலை நோக்கிப் பயணிப்போம். போலிகளினால் எமது நிதர்சனம் கடித உறைகளைப் பயன்படுத்தியும், நகல் எடுக்கப்பட்ட எமது கையெழுத்துக்களை திருட்டுத்தனமாக பயன்படுத்தியும் வரும் கடிதங்களையோ அல்லது அறிக்கைகளையோ நம்பவேண்டாம். எமது இணையத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எமது அறிக்ககளுக்கும், அறிவிப்புக்களுக்கும் நிதர்சனம் நிறுவனம் பொறுப்பேற்கும் என்பதையும் இங்கே அறியத்தருகிறோம்.
நன்றி